/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை முகாம்பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை முகாம்
பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை முகாம்
பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை முகாம்
பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை முகாம்
ADDED : ஆக 01, 2011 01:27 AM
விழுப்புரம் : கோலியனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் இயன்முறை மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தம் தலைமை தாங்கினார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் வின்சென்ட் முன்னிலை வகித்தார். ஐ.இ.ஓ., ஒருங்கிணைப்பாளர் சண்முகம், மாவட்ட ஆவண ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வித் திட்ட இயன் முறை மருத்துவர்கள் லட்சுமிவாசன், பிரவின்குமார், வெங்கடேசன், விஜய மோகன், சவுந்தரராஜன், சுதா, அரசு மருத்துவமனை இயன்முறை மருத்து வர்கள் செல்வகுமார், தேவேந்திரன், அலமேலு மங்கை, சர்மிளா, சசிகலா மருத்துவ பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஹேமலதா, ராமன், சந்திரன், ராஜேந்திரன் கலந்து கொண்டனர். முகாமில் 836 மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.