/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உழைத்தால் உயர்ந்த இலக்கை அடையலாம் : வெங்கேடசன் எம்.எல்.ஏ., அறிவுரைஉழைத்தால் உயர்ந்த இலக்கை அடையலாம் : வெங்கேடசன் எம்.எல்.ஏ., அறிவுரை
உழைத்தால் உயர்ந்த இலக்கை அடையலாம் : வெங்கேடசன் எம்.எல்.ஏ., அறிவுரை
உழைத்தால் உயர்ந்த இலக்கை அடையலாம் : வெங்கேடசன் எம்.எல்.ஏ., அறிவுரை
உழைத்தால் உயர்ந்த இலக்கை அடையலாம் : வெங்கேடசன் எம்.எல்.ஏ., அறிவுரை
ADDED : ஆக 01, 2011 01:30 AM
விழுப்புரம் : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போராட்டம் அறிவித்தால் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே 10 ஆயிரம் பேர் கைதாவார்கள் என்று எம்.எல்.ஏ., வெங்கடேசன் பேசினார்.விழுப்புரத்தில் நடந்த மாவட்ட தே.மு.தி.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசியதாவது:தே.மு.தி.க., வினர் ஒரு போதும் கலக்கம் அடைவதில்லை.
நம்மைப் பார்த்து தான் மற்ற கட்சிக்காரர்கள் கலக்கமடைகின்றனர். தே.மு.தி.க., தனித்து நின்று போராடியதன் விளைவாகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நாம் உழைத்தால் உயர்ந்த இலக்கை அடைய முடியும். வரும் உள்ளாட்சி தேர்தலில் நாம் ஒற்றுமையோடு இருந்து கடுமையாக பணியாற்றினால் அதிக இடங்களில் வெற்றி பெறலாம்.அரசியல் கட்சி என்றாலே எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும். எந்த ஒன்றிய, நகர செயலரும் தனக்கு எதிர்ப்பு இல்லை என்று கூற முடியாது. இருப்பினும் அதிகளவு எதிர்ப்பு இல்லாமல் அனைவரையும் அனுசரித்து கட்சி நடத்த வேண்டும். கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைக்காது. படிப்படியாகவே அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.நம்மிடம் தன்னம்பிக்கையும், பலமும் இருக்கிறது. இதனால் நாம் தொடர்ந்து பல வெற்றிகளை பெறுவோம். நமது தலைவர் விஜயகாந்த் ஒரு போராட்டத்தை அறிவித்தால் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே 10 ஆயிரம் பேர் கைதாகின்ற அளவிற்கு தொண்டர்கள் பலம் நம்மிடம் உள்ளது.இவ்வாறு வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசினார்.