Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/திரிபுராவில் பி.எஸ்.எப்., வீரர் மரணம் : ராணுவ மரியாதையுடன் முன்சிறையில் உடல் தகனம்

திரிபுராவில் பி.எஸ்.எப்., வீரர் மரணம் : ராணுவ மரியாதையுடன் முன்சிறையில் உடல் தகனம்

திரிபுராவில் பி.எஸ்.எப்., வீரர் மரணம் : ராணுவ மரியாதையுடன் முன்சிறையில் உடல் தகனம்

திரிபுராவில் பி.எஸ்.எப்., வீரர் மரணம் : ராணுவ மரியாதையுடன் முன்சிறையில் உடல் தகனம்

ADDED : ஆக 01, 2011 01:56 AM


Google News

புதுக்கடை : திரிபுராவில் உயிரிழந்த பி.எஸ்.எப்., வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரான முன்சிறையில் தகனம் செய்யப்பட்டது.முன்சிறை இறையத்துவீட்டை சேர்ந்தவர் சிவகுமார்(40).

இவர் கடந்த பல ஆண்டுகளாக பி.எஸ்.எப்.,பில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பிரியகுமாரி(35) என்ற மனைவியும், பிரஷணா(11) என்ற மகளும், பிரயாத்(7) என்ற மகனும் உள்ளனர். பிரஷணா 6ம் வகுப்பிலும், பிரயாத் 2ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.சிவகுமார் தற்போது திரிபுராவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27ம் தேதி சிவகுமார் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது. இவரது உடல் நேற்று காலை 11 மணிக்கு சொந்த ஊரான முன்சிறைக்கு கொண்டு வரப்பட்டது.

இவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.பி.எஸ்.எப்., திருவனந்தபுரம் மாவட்ட கமாண்டர் கிருஷ்ணகுமார், துணை கமிஷனர் விஜயன், சப் இன்ஸ்பெக்டர் நாயர் உட்பட பி.எஸ்.எப்., வீரர்கள் பலர் வந்தனர். பின் உயிரிழந்த சிவகுமார் உடலில் தேசியக்கொடியை போர்த்தி ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.புதுக்கடை இன்ஸ்பெக்டர் கருணாகரன், முன்சிறை பஞ்., தலைவர் சந்திரசேகர் உட்பட பலர் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பி.எஸ்.எப்., வீரர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us