Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அடிக்கடி பியூஸ் ஆகும் விளக்குகள்; ஆக்கிரமிப்பில் பாசனக்கால்வாய்

அடிக்கடி பியூஸ் ஆகும் விளக்குகள்; ஆக்கிரமிப்பில் பாசனக்கால்வாய்

அடிக்கடி பியூஸ் ஆகும் விளக்குகள்; ஆக்கிரமிப்பில் பாசனக்கால்வாய்

அடிக்கடி பியூஸ் ஆகும் விளக்குகள்; ஆக்கிரமிப்பில் பாசனக்கால்வாய்

ADDED : ஆக 01, 2011 02:06 AM


Google News
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கருவனூர் ஊராட்சியில் கருவனூர், மந்திக்குளம், தவசிபுதூர் கிராமங்கள் உள்ளன. 780 வீடுகள் உள்ளன. 2,500 பேர் வசிக்கின்றனர்.என்ன தான் பிரச்னை மூன்று கிராமங்களிலும் 50 தெருக்கள் வரையுள்ளன. ஊராட்சி அலுவலகம், நூலகம், கலையரங்கம், சமுதாய கூடம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட, கழிவுநீர் கால்வாய், தேங்கி கிடக்கும் குப்பைகள், எரியாத தெரு விளக்குகள் என அடிப்படை பிரச்னைகளும் இருக்கவே செய்கின்றன. மாட்டுத்தாவணியில் இருந்து கருவனூர் வழியாக பாலமேடுக்கு அரசு டவுன் பஸ் விட்டால் விவசாயிகள் பயன்பெறுவர். பல முறை மனு கொடுத்தும், பஸ்கள் வந்தபாடில்லை. தெரு விளக்குகள் மாற்றப்பட்ட பத்து நாட்களில் பியூஸ் ஆவதாக மக்கள் குமுறுகின்றனர். ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் குளம் தூர்வாரப்படாமல்,

பயனற்று கிடக்கிறது. குடிநீர் போதியதாக இல்லை. பெரியாறு பாசன கால்வாயில் இருந்து கருவனூர் சின்னகண்மாய்க்கு வரும் கிளை கால்வாயில் ஆக்கிரமிப்புகளால், தண்ணீர்வரத்து இல்லாமல் போய் விட்டது.குமுறும் கிராமவாசிகள்*பஞ்சு, மந்திகுளம்: மந்திக்குளத்தில் ரேஷன் கடை இல்லை. இதனால் ஒரு கி.மீ., தூரமுள்ள கருவனூருக்கு செல்ல வேண்டியுள்ளது. குடிநீர் போதியளவு சப்ளை இல்லை.

தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன. புதிதாக மற்றும் தெரு விளக்குகளும் பத்து நாட்கள் வரை மட்டுமே எரிகிறது. தரமான விளக்குளை பொருத்த வேண்டும். மதுரையில் இருந்து கூடுதலாக பஸ்களை விடவேண்டும்.*வளர்மதி, குடும்பத்தலைவி, கருவனூர்: ஊராட்சி அலுவலகத்திற்கு அருகிலுள்ள குளியல் அறை கட்டி, இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. கிராமத்தில் படித்த பெண்கள் உள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களில் இவர்களை உறுப்பினர்களாக்கி, சுயதொழில் செய்ய பயிற்சி கொடுக்க வேண்டும். *முருகன், விவசாயி, கருவனூர்: ஊருக்கு சற்று தள்ளியுள்ள தண்ணீர் வரும் மடை பழுதடைந்துள்ளது. அதை முறையாக செப்பனிட வேண்டும். மழை காலங்களில் தண்ணீர் கண்மாய்க்கு வரும். உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் தேவை. விடுப்பட்ட தெருக்களிலும் ரோடு போட வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அள்ளினால் நல்லது.ஊராட்சி தலைவர் சொல்வது என்ன?

*பழனியாண்டி, ஊராட்சி தலைவர், கருவனூர்: ஊராட்சிக்கு வீட்டு வரி போன்றவை மூலம் மிக சொற்ப வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அண்ணா மறுமலர்ச்சி, நமக்கு நாமே, வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் போன்றவை மூலம் ஒரளவு நிதி கிடைத்தது. அதை வைத்து அத்தியாவசிய தேவைகளை செய்துள்ளேன். ஐந்தாண்டுகளில் ரூ.50 லட்சம் வரை வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பட்டிருக்கும். இதில் ரூ.ஒன்றரை லட்சத்தில் குளியல் குறை, ரூ.18 லட்சத்தில் திருமண மண்டபம், நூலகம், சிமென்ட் ரோடுகள் அமைத்து தரப்பட்டன. நடுநிலை பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடங்கள் கட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குடிநீர் கூடுதலாக பெற மேல்நிலை தொட்டி கூடுதலாக கட்டவும் ஊராட்சி முகமையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கருவனூர் வழியாக அலங்காநல்லூர், பாலமேடுக்கு பஸ் விட பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பயன் இல்லை. தெரு விளக்குகள் முடிந்தளவுக்கு உடனுக்குடன் மாற்றப்படுகின்றன. கழிவு நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தெருக்களில் சிமென்ட் ரோடுகள் போடப்பட்டுள்ளன.

உடனடி தேவை*கூடுதல் அரசு பஸ் வசதி.*கூடுதல் மேல்நிலை தொட்டி.*கூடுதல் ரேஷன் கடை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us