/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் சான்றிதழ் வழங்கும் விழாகோவில்பட்டியில் சான்றிதழ் வழங்கும் விழா
கோவில்பட்டியில் சான்றிதழ் வழங்கும் விழா
கோவில்பட்டியில் சான்றிதழ் வழங்கும் விழா
கோவில்பட்டியில் சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : ஆக 01, 2011 02:28 AM
கோவில்பட்டி : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தூத்துக்குடி கல்வி மையத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.தூத்துக்குடி ஏவிஎம் ஆஸ்பத்திரி எதிர்புறம் இந்தியன் பாங்க் மாடியில் இயங்கிவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தூத்துக்குடி கல்வி மையத்தில் கடந்த 2010ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
கல்வி மைய வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தலைமை வகித்தார். தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்.,செயலாளர் வக்கீல் ராஜசேகரன், சுப்பையா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். அதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சான்றிதழ்கள் பெற்றனர். இதையடுத்து பேராசிரியர் தங்கராஜ் கலந்து கொண்டு 2011ம் ஆண்டிற்கான சேர்க்கையை துவக்கி வைத்து பேசினார். அப்போது தற்போது கல்வி மையத்தில் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.லிட்., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,போன்ற அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடப்பதாக குறிப்பிட்டார். மாணவர் சார்லஸ் நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவியர் கல்வி மைய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.