/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிநிகர லாபம் 13.79 கோடியை எட்டி சாதனைஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிநிகர லாபம் 13.79 கோடியை எட்டி சாதனை
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிநிகர லாபம் 13.79 கோடியை எட்டி சாதனை
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிநிகர லாபம் 13.79 கோடியை எட்டி சாதனை
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிநிகர லாபம் 13.79 கோடியை எட்டி சாதனை
ADDED : ஆக 01, 2011 02:38 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, 2010 - 11ம் ஆண்டில்,
ரூ.13.79 கோடி நிகர லாபத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.ஈரோடு மற்றும்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பகுதியை செயல் எல்லையாக கொண்டு, இவ்வங்கி 28
கிளைகளுடன் செயல்படுகிறது.2010 - 11ம் ஆண்டு தணிக்கையில், வங்கி உறுப்பினர்
பங்குத்தொகை கடந்தாண்டைவிட, 17 சதவீதம் உயர்ந்து, நிகர லாபம் 31.77
கோடியாக உள்ளது.
வங்கியின் மொத்த வைப்புகள் கடந்தாண்டை விட 11 சதவீதம்
உயர்ந்து, 775 கோடியாக உள்ளது. வங்கி வழங்கிய கடன் 18 சதவீதம், 125.18 கோடி
உயர்ந்து, 825 கோடியாக உள்ளது.மார்ச் 2010ல் 5.35 சதவீதமாக இருந்த
செயலிழந்த ஆஸ்திகள் சதவீதம், மார்ச் 2011ல் 3.97 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனால், 2009 - 10ல் 13.27 கோடியாக இருந்த நிகர லாபம், 2010 - 11ம் ஆண்டில்
13.79 கோடியாக உயர்ந்து, வங்கி வரலாற்றிலேயே ஈட்டப்பட்ட உயர்ந்த
அளவுத்தொகையாக உள்ளது. நடப்பாண்டு 31வது தணிக்கை ஆண்டாகும்.
துவங்கப்பட்டதில் இருந்து லாபத்துடன் செயல்படுகிறது.இதனால், 2009 - 10ம்
ஆண்டில் உறுப்பினர்களுக்கு 9.50 பங்கு ஈவு வழங்கப்பட்டுள்ளது. 2010 - 11ல்
218 கோடி பயிற்கடன், மத்திய கால விவசாய கடன் 9.68 கோடி, கூட்டுறவு
சங்கங்களுக்கு காசுக்கடனாக 125 கோடி வழங்கியுள்ளது. சுதந்திர தினத்தை
முன்னிட்டு 444 நாட்கள் வைப்புகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு 11 சதவீதமும்,
மற்றவர்களுக்கு 10.5 சதவீதமும் வட்டி வழங்கப்படும், என தனி அலுவலர்
லோகநாதன் தெரிவித்தார்.