ADDED : ஆக 01, 2011 12:46 PM
புதுடில்லி : நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜூலை மாத விற்பனை 25.34 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் 75,300 கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 1,00,857 கார்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் மாருதி ஸிஃப்ட் கார் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. புதிய ஸிஃப்டி கார் தயாரிப்பு ஆலை ஒன்றை மான்செஸ்டரில் ஆகஸ்ட் மாத மத்தியில் மாருதி சுசுகி நிறுவனம் துவங்க உள்ளது. கடந்த மாதம் டில்லியில் மட்டும் 66,504 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.