ADDED : ஆக 01, 2011 10:08 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட 'ஷேடோகாய் சாய்டோஹா சிட்டோரியூ' சார்பில், மாநில அளவிலான கராத்தே திறனாய்வு போட்டி, அனுப்பர்பாளையத்தில் நடந்தது.திருப்பூர், கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 250க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.'ஷேடோகாய் சிட்டோரியூ' கராத்தே அமைப்பின் தேசிய தலைவர் ரகுநாதன், தலைமை தேர்வாளராக பணியாற்றினார்.
தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு, அந்தந்த பிரிவுக்கேற்ற வண்ண பட்டை, சான்றிதழ் வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்ட நிர்வாகி செந்தில், சுரேஷ் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.


