பசுபதிநாத் கோவில் விவகாரம் : நேபாள அரசுக்கு எதிராக தீர்ப்பு
பசுபதிநாத் கோவில் விவகாரம் : நேபாள அரசுக்கு எதிராக தீர்ப்பு
பசுபதிநாத் கோவில் விவகாரம் : நேபாள அரசுக்கு எதிராக தீர்ப்பு
ADDED : ஆக 01, 2011 10:16 PM

காத்மாண்டு : நேபாளத்தில், புகழ்பெற்ற பசுபதிநாத் கோவில் விவகாரம் தொடர்பாக, ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் கோவில் நிர்வாகக் குழு இடையிலான வழக்கில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், கோவில் குழுவுக்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது.
பசுபதிநாத் கோவில் பகுதி மேம்பாட்டு குழுவுக்கு, ஆண்டுதோறும் தேர்தல் மூலம் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். ஆனால், நேபாளத்தில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கோவில் நிர்வாகத்தில் தலையிடுவது அதிகரித்தது.
சமீபத்தில், மேம்பாட்டுக் குழு கோவில் பணத்தை மோசடி செய்து வருவதால் அதன் நிர்வாகிகளை நீக்கி, அந்நாட்டு கலாசார அமைச்சர் கஜேந்திர பிராசீன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகக் குழு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரகாஷ் ஆஸ்தி, அமைச்சரின் உத்தரவு செல்லாது என உத்தரவிட்டார். இதையடுத்து, மேம்பாட்டுக் குழு நிர்வாகிகள் நேற்று, கோவிலில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு மீண்டும் திரும்பி, பணிகளில் ஈடுபட்டனர்.