தோட்டக்கலை பயிர் மானியம் அறிவிப்பு
தோட்டக்கலை பயிர் மானியம் அறிவிப்பு
தோட்டக்கலை பயிர் மானியம் அறிவிப்பு
வடமதுரை : தேசிய தோட்டக்கலை இயக்ககத் திட்டத்தின் கீழ் மா, நெல்லி, பப்பாளி பயிரிட 75 சதவிகிதத்தில் கன்றுகள், இடுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.
வடமதுரை தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வராஜ் கூறியதாவது: ஒரு ஹெக்டேரில் 'மா' பயிரிட 75 சதவிகித மானியமாக 9900 ரூபாய், நெல்லிக்கு 10503 ரூபாய், பப்பாளிக்கு 24652 ரூபாய், எலுமிச்சைக்கு 15003 ரூபாய் கன்றுகள், இடுபொருட்கள் வழங்கப்படும். திசுவாழை பயிரிட 50 சதவிகித மானியமாக ஹெக்டேருக்கு 31202 ரூபாய்க்கு திசுவாழை கன்றுகளும், வாழைக்கு 50 சதவிகித மானியமாக 16875 ரூபாய்க்கு இடுபொருட்களும் வினியோகிக்கப்படும். மிளகாய், வெங்காய பயிர்களுக்கு 50 சதவிகித மானியத்தில் தலா 12500 ரூபாய்க்கு இடுபொருட்கள் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரே ஷன் கார்டு நகல், இரண்டு பாஸ்போர்ட் போட்டோவுன் தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம், என்றார்.