ADDED : ஆக 02, 2011 12:53 AM

புதுடில்லி : 'லோக்பால் மசோதா தொடர்பாக, கபில் சிபலின் சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்திய அன்னா ஹசாரே, அந்தத் தொகுதியில் போட்டியிடத் தயாரா' என, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது: லோக்பால் மசோதா தொடர்பாக, மத்திய அமைச்சர் கபில் சிபலின், டில்லி சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் முடிவை ஹசாரே வெளியிட்டுள்ளார்.
முடிந்தால், 2014ம் ஆண்டு நடக்கும் அடுத்த லோக்சபா தேர்தலில், அந்தத் தொகுதியில், அன்னா ஹசாரே போட்டியிடட்டும் பார்க்கலாம்.
அப்போது உண்மை வெளிவரும்.பார்லிமென்டின் திறன் மற்றும் சிறப்பு அதிகாரத்தின் மீது ஹசாரேயும், அவரது நண்பர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் சர்வே வேண்டுமானால், நடத்தலாம். ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்போடு விளையாடக் கூடாது. இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.