ADDED : ஆக 02, 2011 01:01 AM
சங்கராபுரம் : பொரசப்பட்டு கிராமத்தில் துணை மின் நிலையம் அமைய உள்ள இடத்தை
கலெக்டர் பார்வையிட்டார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு
கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க இரண்டரை ஏக்கர் இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை கலெக்டர் மணிமேகலை நேரில்
பார்வையிட்டார்.சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன், மின் வாரிய
செயற்பொறியாளர் வேங்கடசுப்பன், மின்துறை அலுவலர்கள் செல்வமணி, சீனிவாசன்,
வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி உடனிருந்தனர்.