/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இந்திய விளையாட்டு குழுமம் தேர்வு போட்டி : மதுரை மண்டலத்தில் ஆக.8ல் துவக்கம்இந்திய விளையாட்டு குழுமம் தேர்வு போட்டி : மதுரை மண்டலத்தில் ஆக.8ல் துவக்கம்
இந்திய விளையாட்டு குழுமம் தேர்வு போட்டி : மதுரை மண்டலத்தில் ஆக.8ல் துவக்கம்
இந்திய விளையாட்டு குழுமம் தேர்வு போட்டி : மதுரை மண்டலத்தில் ஆக.8ல் துவக்கம்
இந்திய விளையாட்டு குழுமம் தேர்வு போட்டி : மதுரை மண்டலத்தில் ஆக.8ல் துவக்கம்
விருதுநகர் : இந்திய விளையாட்டு குழுமம் சார்பில் ,பள்ளிகளுக்கிடையே மதுரை மண்டல அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு போட்டிகள் ஆக., 8ல் துவங்குகின்றன.
பெண்கள் பிரிவில் மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக்., பள்ளியில் ஆக.,10 ல் கால்பந்து, மதுரை ரேஸ்கோர்சில் ஆக.13ல் ஹாக்கி , மதுரை, டி.வி.எஸ்., மெட்ரிக்., பள்ளியில் ஆக.,9 ல் வாலிபால், தேனி, என்.எஸ்., மேல் நிலைப்பள்ளியில் ஆக.,10 ல் கூடைப்பந்து , மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் பள்ளியில் ஆக.,10 ல் கபடி, கோ-கோ, பால் பாட்மிண்டன், மதுரை, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆக.,9 ல் ஹேண்ட்பால், திருமங்கலம் மெப்கோ மெட்ரிக்., பள்ளியில் ஆக., 13 ல் துரோ பால், மதுரை ரேஸ்கோர்சில் ஆக. 13 ல் பாட்மிண்டன் (சட்டில்) வி.கே.கே.பிளே குரூப் மெட்ரிக்., பள்ளியில் ஆக. 13 ல் டேபிள் டென்னிஸ், மதுரை ரேஸ் கோர்சில் ஆக., 13 ல் லான் டென்னிஸ் போட்டிகளும் நடக்கின்றன. இதன் போட்டிகள் ஆண்கள் பிரிவில் 14, 17, 19 வயது பிரிவுகளுக்கும்,பெண்கள் பிரிவில் 17,19 வயது பிரிவுகளுக்கு கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கபடி, 19 வயது பிரிவினருக்குபால்பாட் மிண்டன் , மற்ற விளையாட்டுகளில் 14,17,19 வயது பிரிவினர் பங்கு கொள்ளலாம். இதில் தேர்வாகும் வீரர்கள் மாநில போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.