/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பெண்கள் நடமாட முடியாத நிலை : "டாஸ்மாக்'கடையை மாற்றாவிட்டால் பூட்டுபெண்கள் நடமாட முடியாத நிலை : "டாஸ்மாக்'கடையை மாற்றாவிட்டால் பூட்டு
பெண்கள் நடமாட முடியாத நிலை : "டாஸ்மாக்'கடையை மாற்றாவிட்டால் பூட்டு
பெண்கள் நடமாட முடியாத நிலை : "டாஸ்மாக்'கடையை மாற்றாவிட்டால் பூட்டு
பெண்கள் நடமாட முடியாத நிலை : "டாஸ்மாக்'கடையை மாற்றாவிட்டால் பூட்டு
ADDED : ஆக 02, 2011 11:32 PM
சிவகாசி : முனீஸ்வரன் காலனி டாஸ்மாக் கடைக்கு ஒரு மாதத்திற்குள் பூட்டு போட ஜனநாயக வாலிபர் சங்கம் முடிவு செய்துள்ளது.
விஸ்வநத்தம் ஊராட்சியில் 4, 5வது வார்டு பகுதியாக முனீஸ்வரன் காலனி உள்ளது. இக் காலனிக்கு எதிரே நூற்றக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் பட்டாசு ஆலை, பள்ளிக்கூடம் உள்ளது.
இப் பகுதி மெயின் ரோட்டில் டாஸ்மாக் , பார் செயல்படுகிறது. டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் பார்க்கு வெளியே நின்று குடிப்பதும், போதையில் நடைபாதையில் விழுந்து கிடப்பதும், போதை ஆசாமிகள் குடியிருப்பு பகுதியில் அரைகுறை உடையுடன் நடந்து செல்வதால்,இரவில் பெண்கள் நடமாட முடியாத நிலை நிலவுகிறது. வீட்டின் முன் உள்ள பொருட்களையும், வாகனங்களையும் சேதப்படுத்துகின்றனர். டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும் என முதல்வர், கலெக்டருக்கு பொதுமக்கள் கையெழுத்திட்டு மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால் பொதுமக்களுடன் சென்று டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட தீர்மானித்துள்ளனர்.