/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/504 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நெல்லை மாநகர் இந்து முன்னணி முடிவு504 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நெல்லை மாநகர் இந்து முன்னணி முடிவு
504 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நெல்லை மாநகர் இந்து முன்னணி முடிவு
504 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நெல்லை மாநகர் இந்து முன்னணி முடிவு
504 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நெல்லை மாநகர் இந்து முன்னணி முடிவு
திருநெல்வேலி : நெல்லையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த ஆண்டு 504 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
இந்து முன்னணி மாநகர் மாவட்டத்தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் குற்றாலநாதன், வெட்டும்பெருமாள், உடையார், வேல் ஆறுமுகம், சாரதி, பா.ஜ., நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், குருசாமி, முருகதாஸ், காந்தி, கோமதிசங்கர் ஆகிய 11 பேர் கொண்ட விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அமைக்கப்பட்டது.
திருநெல்வேலி : ஏர்வாடியில் நிறுத்தப்பட்ட நம்பியாற்று பெரியபால சீரமைப்புப்பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏர்வாடியில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் வாகனங்கள் செல்லும் பாதையில் நம்பியாற்று பெரிய பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படவில்லை. பாலத்தின் வழியே தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், கனரக லாரிகள் உட்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். கடந்த திமுக ஆட்சியில் பாலத்தை சீரமைக்க 3.2 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. கடந்த 5 மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட பால சீரமைப்புப்பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி ஏர்வாடியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ., மாவட்டச்செயலாளர் ஹபீப் ரகுமான் தலைமை வகித்தார். நான்குநேரி தொகுதி எஸ்.டி.பி.ஐ., தலைவர் தாஜ்தீன், பொருளாளர் ஷேக்பீர் முன்னிலை வகித்தனர். நகர கிழக்கு கிளைத்தலைவர் ஜாஹீர்உசேன் வரவேற்றார். பங்குத்தந்தை வில்லியம், நகர காங்., தலைவர் ஜெர்மான்ஸ், ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர் பீர்முகமது, டவுன் பஞ்., துணைத்தலைவர் கிருஷ்ணப்பெருமாள், ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர் கேப்டன் சாகிபு, களக்காடு ஒன்றிய முன்னாள் சேர்மன் வேலு, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் செந்தில், பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாவட்டத்தலைவர் அன்வர்முகைதீன், எஸ்.டி.பி.ஐ., நான்குநேரி தொகுதி செயலாளர் ஜாஹீர்உசேன், நகரச்செயலாளர் ஆஷிக் உட்பட பலர் பேசினர். நகரத்தலைவர் அயூப்கான் நன்றி கூறினார்.