ADDED : ஆக 03, 2011 12:45 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண்
பிணத்தை பெரம்பலூர் போலீஸார் கண்டெடுத்தனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலம்
பின்புறம் உள்ள தீரன் நகருக்கு செல்லும் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க
ஆண் இறந்து கிடந்தார்.
இவர் புளு கலர் சட்டையும், சிமெண்ட் கலர் பேண்டும்
போட்டிருந்தார். இறந்து 10 நாளுக்கு மேல் இருக்கும் நிலையில் உடல் அழுகிய
நிலையில் காணப்பட்டது. இது குறித்து பெரம்பலூர் வி.ஏ.ஓ., ரெங்கராஜன்
கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன்
விசாரிக்கிறார்.