/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
ADDED : ஆக 03, 2011 01:00 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்துக்கு இந்த
ஆண்டு கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சிலைகளை இறக்குமதி செய்வதை கைவிட்டு,
ஓசூர் பகுதியில் வெளிமாநில, மாவட்ட சிலை தயாரிப்பு குழுவினரை வரவழைத்து
உயர் தொழில் நுட்பத்தில் பல்வேறு வண்ண விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி
முழுவீச்சில் நடக்கிறது.ஹிந்துக்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில்
விநாயகர் சதூர்த்தி முக்கிய பண்டிகையாகும். பழமைக்கு பெயர் போன கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக
கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தொழில் நகரமான ஓசூர், தேன்கனிக்கோட்டை,
மதகொண்டப்பள்ளி, மத்திகிரி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள்
வைத்து பூஜை செய்து, அதன்பின் இளைஞர்களின் ஆட்டம், பாட்டத்துடன் சிலைகள்
ஊர்வலமாக ஏரி, குளங்களுக்கு பாதுகாப்பாக கரைக்கப்படுகிறது.ஓசூர் நகரில்
ஒவ்வொரு வீடுகள் முன்பும், வீதிகள், சாலைகள் சந்திப்புகளிலும்,
குடியிருப்பு சங்கங்கள், ஹிந்து அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் சார்பில்
ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் வைத்து தினம் அந்த சிலைகளுக்கு எருக்கம் பூ
அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை
செய்வார்கள்.
அப்போது விநாயகருக்கு விருப்பமான, கொழுக்கட்டை, அப்பம்,
சுண்டல், வடை, அவல் மற்றும் பொரி ஆகியவற்றை படைத்து வணங்கி
மகிழ்கின்றனர்.விநாயகர் சதுர்த்திக்காக ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும்
தேன்கனிக்கோட்டை சேர்ந்த ஹிந்து அமைப்பினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்,
ஆந்திரா, கர்நாடகா மற்றும் கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களுக்கு சென்று
விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்வார்கள்.
நடப்பாண்டு ஓசூர் பகுதியை சேர்ந்தவர்கள், விழுப்புரம், கடலூரில் இருந்து
சிலை தயாரிப்பு குழுவினரை வரவழைத்து நான்கு அடி முதல் 10 அடி உயரம் வரை
கொண்ட பல்வேறு வண்ண விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்கின்றனர்.பொதுவாக, சிலை
தயாரிப்பில் ஐந்து அடி முதல் 10 அடி உயர சிலைகள் தயாரிப்பதற்கு 2,000
ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகிறது. இந்த சிலைகள் 15,00 ரூபாய்
முதல் 30,000 ரூபாய் வரை விற்பதால், சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.ஓசூர் பகுதியில் உற்பத்தி
செய்யப்படும் சிலைகள் சுற்று சூழலுக்கு மாசு ஏற்பாடாதவகையில் சுற்று
சூழல்பாதுகாப்பு துறை அறிவுறுத்தும் தொழில்நுட்பத்தின்படி சிலைகள் தயார்
செய்யப்படுவதாக ஓசூர் ஏ.எஸ்.பி., அலுவலகம் எதிரே சிலை தயாரிப்பு பணியில்
ஈடுப்பட்டுள்ள மத்திகிரியை சேர்ந்த எல்லப்பன் தெரிவித்தார். இது குறித்த
அவர் கூறியதாவது:சுற்று சூழலுக்கு மாசு ஏற்பாடாதவகையில், நீரில் எளிதில்
கரையகூடிய பேப்பர் அட்டை, கடலை மாவு, மைதா மாவு மற்றும் பிளாஸ்டர் பொடிகளை
வைத்து விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம். இவற்றில் பிளாஸ்டர் ஆஃப் பஸ்டர்
பசை போன்றது. மாவை காய்த்து, அவற்றுடன் பிளாஸ்டர் பவுடரை சேர்க்கும்போது,
சிலை உடையவும், விரிசல் விழவும் செய்யாது.சிலைகளில் சிங்கம், மயில், மலர்
மற்றும் பல்வேறு வாகனங்களையும் வடிவமைத்து கூடுதல் அழகுப்படுத்தப்படுகிறது.
சிலை வடிவமைத்தபின், அந்த சிலைகளுக்கு வார்னீஸ், பெயிண்டிங் மற்றும்
கிருஷ்ணா ஆயில் ஆகியவற்றை கலந்து பெயிண்டிங் பிளிச்சிங் கண் மூலம் நவீன
முறையில் பெயிண்டிங் அடிக்கப்படுகிறது.வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில்
ஆர்டர்களுக்கு ஏற்ப சிகப்பு, பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட அனைத்து வண்ண
கலர்களிலும் சிலைகள் தயார் செய்து கொடுக்கிறோம். தினம் நான்கு தொழிலாளர்கள்
இரு சிலைகளைதான் உற்பத்தி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


