/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காங்கிரஸ் ஆட்சி உள்ளவரை கறுப்பு பணம் வெளியே வராது :ராஜா சொல்கிறார்காங்கிரஸ் ஆட்சி உள்ளவரை கறுப்பு பணம் வெளியே வராது :ராஜா சொல்கிறார்
காங்கிரஸ் ஆட்சி உள்ளவரை கறுப்பு பணம் வெளியே வராது :ராஜா சொல்கிறார்
காங்கிரஸ் ஆட்சி உள்ளவரை கறுப்பு பணம் வெளியே வராது :ராஜா சொல்கிறார்
காங்கிரஸ் ஆட்சி உள்ளவரை கறுப்பு பணம் வெளியே வராது :ராஜா சொல்கிறார்
ADDED : ஆக 03, 2011 01:17 AM
கோவை : ''மத்தியில் காங்., ஆட்சி உள்ளவரை கருப்பு பணம் வெளியே வராது,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராஜா பேசினார்.
கோவை உக்கடம் பா.ஜ., சார்பில் இக்கட்சியின் பொதுக்கூட்டம் செட்டி வீதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. உக்கடம் பகுதி தலைவர் கண் மணிபாபு தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராஜா பேசியதாவது:மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்து செயல்பட்ட காரணத் தால் இன்று தமிழ கத்தில் ஆட்சி மாற்றம் வந்துள்ளது. மும்பையில் கடந்த மாதம் 13ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பாதுகாப்பு எந்ந நிலையில் உள்ளது என்பதற்கு சான்றாகும். மக்களை பாதுகாக்க மத்தியிலுள்ள காங்., அரசு தவறிவிட்டது. காங்., அரசு ஆட்சியில் இருக்கும் வரை கருப்பு பணம் வெளியே வராது. இவ்வாறு, ராஜா பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சபரிகிரிஷ் உட்பட பலர் பங்கேற் றனர்.


