வாகன திருட்டை கண்காணிக்க வேண்டுகோள்
வாகன திருட்டை கண்காணிக்க வேண்டுகோள்
வாகன திருட்டை கண்காணிக்க வேண்டுகோள்
ADDED : ஆக 03, 2011 01:31 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறுத்தப்படும் வாகனங்கள்
அடிக்கடி திருடு போவதை தடுக்க கண்காணிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள்
குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.இது குறித்து கால்பந்து வீரர்கள்
சார்பில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்ட விளையாட்டு
மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட கால்பந்து அணி வீரர்கள் பயிற்சி பெற்று
வருகின்றனர். கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள தர்மபுரி நகரை
சேர்ந்த இளைஞர்களுக்கு முறையான பயறிஞூசி அளிக்க கடந்த நான்கு ஆண்டாக
பயிற்சியாளர்கள் இல்லை.இதனால், தர்மபுரி மாவட்ட கால்பந்து விளையாட்டு
வீரர்கள் முழுமையான பயிற்சி கிடைக்காமல் போட்டிகளில் பங்கேற்கும் போது,
முழு திறமையையும் காட்ட முடியாத நிலையுள்ளது. கால்பந்து விளையாட்டு
பயிற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் கால்பந்து பயிற்சியாளரை நியமிக்க
வேண்டும்.மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற பலரும் இரு சக்கர
வாகனங்கள், சைக்கிள் உள்ளிட்டவைகளை வந்து விளையாட்டு அரங்க வாகன ஸ்டாண்டில்
நிறுத்தி விட்டு செல்கின்றனர். சமீப காலமாக அதிக அளவில் இரு சக்கர
வாகனங்கள் திருட்டு நடந்து வருகிறது.
விளையாட வரும் வீரர்களுடன் திருட்டு கும்பலும் உள்ளே புகுந்து இரு சக்கர
வாகனங்களை அடிக்கடி திருடி செல்லும் சம்பவம் அதிகம் நடந்து வருகிறது. வாகன
திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை மற்றும் மாலை
நேரங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, வாகன திருட்டை தடுக்க
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.