Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கணும்

அரியலூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கணும்

அரியலூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கணும்

அரியலூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கணும்

UPDATED : ஆக 03, 2011 01:43 AMADDED : ஆக 03, 2011 01:41 AM


Google News
அரியலூர்: 'அரியலூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரியலூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்ட தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த, கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் ஜான் கென்னடி, கவியரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், சின்ன பாண்டு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:வருகிற 25ம் தேதி தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை, வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிப்பது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, கிராம வார்டு கிளைகளில், சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, அன்னதானம், ரத்த தானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வது.அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளை பகுதிகளில் உள்ள தே.மு.தி.க., வினர், தங்களது பழைய உறுப்பினர் அட்டைகளை புதுப்பித்து, புதிய உறுப்பினர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் ஒன்றரை லட்சம் உறுப்பினர்களை கொண்ட தீவிர இயக்கமாக வளரச்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜெயங்கொண்டம் நகரின் வழியாக அனைத்து கனரக வாகனங்களும் செல்வதால், நகரில் போக்குவரத்து நெரிசல், மாசு கட்டுப்பாடு, சுகாதாரமின்மை, மக்களின் பயணத்தில் கால தாமதம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஜெயங்கொண்டம் நகரில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசை கேட்டுக்கொள்வது.அரியலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தேளூரில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க, தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை துரிதமாக துவங்கி செயல்படுத்திட வேண்டும்.அரியலூர் மாவட்ட மக்களின் வேண்டுகோளை ஏற்று, அரியலூர் வழியாக செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன், கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென்னக ரயில்வே பொதுமேலாளரை கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட கேப்டன் மன்ற நிர்வாகிகள் புயல் செல்வம், செந்தில், ஜேக்கப், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் புரட்சி சிவா, ராஜா, கோபி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ராணி ஜோசப், கமலம், சுமதி, மாவட்ட வர்த்தகர் அணி நிர்வாகிகள் எழிலரசன், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்ட வர்த்தகர் அணி துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us