ADDED : ஆக 03, 2011 01:50 AM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழுக் கூட்டம்
நடந்தது.
கிளைத் தலைவர் சேதுமாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர்
செல்வராஜ், கிளை பொருளாளர் ஜெயவேல் முன்னிலை வகித்தனர். செயலர் கண்ணன்
வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசுஅலுவலகங்களில் புகார்
தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் பெயர்களை அழியாத மையினால் எழுதி வைக்க
வேண்டும். ரேஷன் கடைகள் குறிப்பிட்ட வேலை நேரத்தில் செயல்பட வேண்டும்.
பத்திரப் பதிவு கட்டணங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் உள்ளிட்ட
பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


