ADDED : ஆக 03, 2011 07:47 PM
மாஸ்கோ : ரஷ்யாவில், 10 விதமான மத பயங்கரவாத குழுக்களும், 7,500 பயங்கரவாத இணையதளங்களும் செயல்பாட்டில் இருப்பதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஷீத் நுர்காலியேவ் கவலை தெரிவித்துள்ளார்.
இவற்றில் பயங்கரவாதக் குழுக்கள், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடுவதாகவும், வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.