/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகளுக்கான கால்பந்து ஆக.,11ம் தேதி துவக்கம்பள்ளிகளுக்கான கால்பந்து ஆக.,11ம் தேதி துவக்கம்
பள்ளிகளுக்கான கால்பந்து ஆக.,11ம் தேதி துவக்கம்
பள்ளிகளுக்கான கால்பந்து ஆக.,11ம் தேதி துவக்கம்
பள்ளிகளுக்கான கால்பந்து ஆக.,11ம் தேதி துவக்கம்
ADDED : ஆக 03, 2011 10:55 PM
கோவை : மாவட்ட அளவில் 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் பள்ளி மாணவருக்கான கால்பந்து போட்டி, வரும் 11ம் தேதி முதல் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் 'சரஸ்வதி ஸ்போர்ட்ஸ் அகாடமி கோப்பை' 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் மாணவருக்கான கால்பந்து போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பெயரை வரும் ஐந்தாம் தேதிக்குள் (நாளை) பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட கால்பந்து சங்க அலுவலகம், 81-நேரு ஸ்டேடியம், கோயம்புத்தூர்-18 அல்லது மொபைல்: 94426 52509, 94435 06747 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட கால்பந்து சங்கச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.


