/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்
நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்
நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்
நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்
திருநெல்வேலி : நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு மூலம் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமாக பாஸ்போர்ட் வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு மூலம் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. இப்பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய பாஸ்போர்ட்கள் வழங்க மூன்று மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுவதால் இதனை அணுக பொதுமக்கள் தயங்கி வருகின்றனர்.புதியதாக ஆரம்பித்த பாஸ்போர்ட் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் போலீஸ் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து பாஸ்போர்ட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாளடைவில் கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு 'மூடு விழா' நடத்த தற்போதே ஏற்பாடுகள் தயாராகி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.எனவே, கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு மூலம் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கும் குறித்த காலத்தில் பாஸ்போர்ட் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.


