/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தாமிரபரணியில் ஆடி 18ம் பெருக்கு விழா பெண்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடுதாமிரபரணியில் ஆடி 18ம் பெருக்கு விழா பெண்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடு
தாமிரபரணியில் ஆடி 18ம் பெருக்கு விழா பெண்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடு
தாமிரபரணியில் ஆடி 18ம் பெருக்கு விழா பெண்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடு
தாமிரபரணியில் ஆடி 18ம் பெருக்கு விழா பெண்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடு
திருநெல்வேலி : 18ம் பெருக்கு எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தாமிரபரணி கரையில் பெண்கள் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர்.தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு என தனிச்சிறப்பு உண்டு.
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், சூடன் வைத்து அம்பாளை வழிபட்டனர். திருமணமான பெண்கள், தங்களது கணவர் பூரண நலமுடன் வாழவும், திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமையவேண்டியும் ஆடிப்பெருக்கு நாளில் தாமிரபரணி நதியில் நீராடி விளக்கேற்றி அம்பாளை வழிபட்டனர்.மேலும் தாமிரபரணி நதியில் இலை மீது சூடன் ஏற்றியும் வழிபட்டனர். பூஜையில் படைக்கப்பட்ட மஞ்சள் சரடுகளை கழுத்தில் அணிந்து கொண்டனர். வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட முளைப்பாரிகளை தாமிரபரணி நதியில் கரைத்தனர்.மேலும் ஆடிப்பெருக்கு நாளான நேற்று பல வகைகளாக சித்ரா அன்னங்கள் (உணவு வகைகளை) தாமிரபரணி ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.ஆடிப்பெருக்கு வைபவத்தை முன்னிட்டு வீடுகளிலும் மாக்கோலமிட்டு, சர்க்கரை பொங்கல் வைத்து அம்பாளை வழிபட்டனர். அம்மன் கோயில்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனை, பூஜைகளில் பெண்கள் பங்கேற்றனர்.


