/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் வட்டாரத்தில் மழை குறைவு: விவசாயிகள் சோகம்கரூர் வட்டாரத்தில் மழை குறைவு: விவசாயிகள் சோகம்
கரூர் வட்டாரத்தில் மழை குறைவு: விவசாயிகள் சோகம்
கரூர் வட்டாரத்தில் மழை குறைவு: விவசாயிகள் சோகம்
கரூர் வட்டாரத்தில் மழை குறைவு: விவசாயிகள் சோகம்
ADDED : ஆக 06, 2011 02:13 AM
கரூர் : கரூர் வட்டராத்தில் கடந்த ஏழு மாதங்களில் ஏப்ரலில் மட்டும் அதிகப்பட்ச மழை பெய்துள்ளது.
மற்ற மாதங்களில் சராசரிக்கும் குறைவாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் மே. ஜூன், ஜூலை மாதங்களில் தென் மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் மழை பெய்யவில்லை. ஃபிப்ரவரி மாதத்தில் 7.80 மி.மீ., மார்ச்சில் 4.3., மழைதான் பெய்தது. இது சராசரி மழையளவை விட குறைவு. ஆனால் ஏப்ரலில் பெய்ய வேண்டிய சராசரிய மழையளவான 34.50 மி.மீ., விட அதிகப்பட்சமாக 105.31 மி.மீ., கோடை மழை பெய்தது. மே மாதத்தில் 35.70, ஜூன் மாதத்தில் 8.93, ஜூலை மாதத்தில்1.16 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 194.30 மி.மீ., ஆகும். ஆனால் 19 சதவீதம் குறைவாக 157.89 மி.மீ., மழை மட்டுமே கரூர் வட்டாரத்தில் பெய்துள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், மானாவரி நிலங்களை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


