Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/19 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் மின்வாரியம் அலைக்கழிப்பதாக புகார்

19 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் மின்வாரியம் அலைக்கழிப்பதாக புகார்

19 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் மின்வாரியம் அலைக்கழிப்பதாக புகார்

19 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் மின்வாரியம் அலைக்கழிப்பதாக புகார்

ADDED : ஆக 06, 2011 10:09 PM


Google News
சிவகங்கை:மின் இணைப்பு கேட்டு 19 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளை அலைக்கழிப்பு செய்வதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.மின் வாரியத்தில் மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு நான்கு கட்டமாக வழங்கப்படும் என அரசு அறிவிப்பு செய்தது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்பாதைக்கு அருகில் கிணறு அமைத்துள்ளவர்களுக்கு முதற் கட்டமாகவும், இரண்டு முதல் ஐந்து மின் கம்பங்கள் அமைத்து இணைப்பு கொடுப்பது இரண்டாவது கட்டமாகவும், பின்னர் அடுத்தடுத்து தொலைவில் உள்ள கிணறுகளுக்கு இணைப்பு வழங்கப்படும் என வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்துடன் இணைப்பு சான்று: மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் சிட்டா நகல், சிறு குறு விவசாயம் செய்பவரா, பரப்பளவு போன்றவைக்கான வி.ஏ.ஓ., சான்று, பொதுப்பணித்துறையில் நீர்மேலாண்மை சான்று, நான்கு நட்சத்திர மோட்டார் வாங்கியதற்கான ரசீது, உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என வாரியம் அறிவித்திருந்தது.இணைப்புக்கு அலைக்கழிப்பு: இணைப்பு கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்த போது, அரசு தெரிவித்த நான்கு நட்சத்திர மோட்டாருக்கு தட்டுப்பாடு இருந்தது.

இதனால் கடைகளில் மோட்டாருக்கான ரசீது மட்டும் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கினால் போதும் என வாரியம் தெரிவித்தது. கிணறுகளில் களஆய்வு செய்ய வரும் வாரிய அதிகாரிகள் நான்கு நட்சத்திர மோட்டார் இல்லை என்பதால் இணைப்பு வழங்க அனுமதி தர மறுத்து விடுகின்றனர். அலுவலகத்தில் கேட்டால் மோட்டார் தட்டுப்பாடு உள்ள போதுதான் தெரிவித்தோம், தற்போது மோட்டார் பொருத்தினால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும் என்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் பெரியகிழவச்சி விவசாயி கொங்கையன் கூறியதாவது: கிணறுகளுக்கு அருகில் உள்ள விவசாயிகளுக்கு உடனடி மின் இணைப்பு வழங்கப்படும் என பெயர் அளவில் மட்டுமே அறிவிப்பு செய்தனர். இணைப்பு கேட்டு 1992ல் விண்ணப்பித்தேன். இணைப்பிற்காக எனது அப்பா பெயரில் இருந்த பத்திரங்களை மாற்ற, வி.ஏ.ஓ., சான்று உள்ளிட்ட ஆவணங்கள், அரசு தெரிவித்த நட்சத்திர மோட்டார் உள்ளிட்டவைகளுக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். விவசாயம் செய்ய முடியாமல் நிலம் தரிசாக கிடக்கிறது. மின் இணைப்பு தர உயர் அதிகாரிகளுக்கு மனமில்லை, என்றார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிமூலம் கூறியதாவது: மாவட்டத்தில் மின் வாரியத்தில் மின் இணைப்பு கேட்டு பதிவு செய்தவர்களை முறையாக பட்டியலிடாமல் அதிகாரிகள் குளறுபடி செய்துள்ளதால் இதுபோன்று மாநிலம் முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டால் டிரான்ஸ்பார்மர் பற்றாக்குறை, மின்கடத்தி கையிருப்பு இல்லை, பணியாளர்கள் பற்றாக்குறை என காரணம் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், ஏழை விவசாயிகளின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின் இணைப்புக்கு பதிவு செய்த விவசாயிகளில் 200 பேருக்கு பரிந்துரை செய்யப்பட்டும், 4 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us