/உள்ளூர் செய்திகள்/தேனி/சாஸ்த்ரா பல்கலையில் பி.எட்.,படித்தவர்களுக்கு சம்பள உயர்வுசாஸ்த்ரா பல்கலையில் பி.எட்.,படித்தவர்களுக்கு சம்பள உயர்வு
சாஸ்த்ரா பல்கலையில் பி.எட்.,படித்தவர்களுக்கு சம்பள உயர்வு
சாஸ்த்ரா பல்கலையில் பி.எட்.,படித்தவர்களுக்கு சம்பள உயர்வு
சாஸ்த்ரா பல்கலையில் பி.எட்.,படித்தவர்களுக்கு சம்பள உயர்வு
ADDED : ஆக 06, 2011 10:31 PM
தேனி:தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில் தொலைதூரக்கல்வி மூலம் இரண்டாண்டு கால
பி.எட்., பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அலுவலக உத்தரவில்
கூறப்பட்டிருப்பதாவது: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில், தொலைதூரக் கல்வி
மூலமாக வழங்கப்படும் இரண்டாண்டு பி.எட்., தகுதியை, பல்கலைகளில் முறையாக
வழங்கப்படும் ஓராண்டு பி.எட்., பட்டத்திற்கு இணையானதாக கருதலாம்.
பொதுப்பணிகளில் வேலை வாய்ப்புகள் வழங்கவும் அங்கீகரிக்கலாம் என
உத்தரவிடப்படுகிறது. இப்பட்ட சான்று பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு,
மற்றும் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடையவர்களாகின்றனர். இந்த உத்தரவின்
மீது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என
கூறப்பட்டுள்ளது.


