Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி

சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி

சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி

சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

தாம்பரம் : நான்கு வழிச்சாலையான வேளச்சேரி சாலையில், சில இடங்களில் இரண்டு வழிப்பாதையே உள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களை விரிவாக்கம் செய்ய, அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டிகள், தினசரி நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரான, தாம்பரம் - வேளச்சேரி சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. கிழக்கு தாம்பரத்தில் இருந்து, இச்சாலை வழியாக பிராட்வே, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை, கிண்டி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதனால், 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படும். இச்சாலையில், கிழக்கு தாம்பரம், சேலையூர், காமராஜபுரம் ஆகிய பகுதிகளில், சில மீட்டர் தூரம் இன்னும் இரண்டு வழிப்பாதையாகவே உள்ளது. இதனால், தினசரி 'பீக் அவரில்' கடும் நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், அந்த இடங்களைக் கடக்க, குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.சாலையோர ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளன. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னையைத் தீர்க்க, சாலையை விரிவாக்கம் செய்ய, இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.



கடந்த ஆண்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கினர். ஆனால், பெயருக்காக சில இடங்களில் மட்டும் அகற்றிவிட்டு, அப்படியே விட்டு விட்டனர்.சாலை குறுகியுள்ளதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், புறநகரில் அதிக வாகனப் போக்குவரத்து கொண்ட, தாம்பரம் - வேளச்சேரி சாலை தினசரி நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. எனவே, இரண்டு வழிப்பாதை உள்ள இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.இது குறித்து, பெயர்கூற விரும்பாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'கிழக்கு தாம்பரத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய, நிலம் கையகப்படுத்துவது குறித்து, கலெக்டருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இதற்கான நோட்டீஸ் வழங்கப்படும். அதன்பின், சாலை விரிவாக்கம் செய்யப்படும். சேலையூர், காமராஜ புரம் பகுதிகளிலும், சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us