/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/23 மோட்டார் சைக்கிள்கள் திருடிய மருத்துவமனை ஊழியர் கைது23 மோட்டார் சைக்கிள்கள் திருடிய மருத்துவமனை ஊழியர் கைது
23 மோட்டார் சைக்கிள்கள் திருடிய மருத்துவமனை ஊழியர் கைது
23 மோட்டார் சைக்கிள்கள் திருடிய மருத்துவமனை ஊழியர் கைது
23 மோட்டார் சைக்கிள்கள் திருடிய மருத்துவமனை ஊழியர் கைது
ADDED : ஆக 07, 2011 12:59 AM
மதுராந்தகம் : மோட்டார் சைக்கிள் திருடிய, அரசு மருத்துவமனை ஊழியர் உட்பட, இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் திருடு போனது. இது குறித்து, மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.கடந்த ஆறாம் தேதி இரவு, போலீசார் வேடந்தாங்கல் சாலையில் ரோந்து சென்றபோது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. பிடிபட்டவர்கள் செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜசேகர், 30, மற்றும் செஞ்சியை சேர்ந்த அலி, 26 என்பதும், ராஜசேகர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வேன் டிரைவராகப் பணிபுரிவதும் தெரியவந்தது.இருவரும் இணைந்து, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர்.இவர்களிடமிருந்து, 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கைது செய்த போலீசார், மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி, நீதிபதி காஞ்சனா உத்தரவிட்டார்.


