/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தங்க முலாம் பூசிய நகைகளை விற்க முயன்ற இருவர் கைதுதங்க முலாம் பூசிய நகைகளை விற்க முயன்ற இருவர் கைது
தங்க முலாம் பூசிய நகைகளை விற்க முயன்ற இருவர் கைது
தங்க முலாம் பூசிய நகைகளை விற்க முயன்ற இருவர் கைது
தங்க முலாம் பூசிய நகைகளை விற்க முயன்ற இருவர் கைது
ADDED : ஆக 07, 2011 01:02 AM
திருவள்ளூர் : திருவள்ளூரில் உள்ள நகை கடையில், தங்க முலாம் பூசிய நகைகளை, தங்கம் எனக் கூறி விற்க முயன்ற, இரண்டு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் பஜார் தெருவை சேர்ந்தவர் சாந்திலால் மகன் பிரகாஷ், 42.
இவர், அதே தெருவில் நகை கடை வைத்துள்ளார். இக்கடைக்கு, இரண்டு நபர்கள் நேற்று முன்தினம் மாலை வந்து, 20 ஞான குழாய்களை விற்க வேண்டும் என கூறினர். அவர்களிடமிருந்த ஞான குழாய்களை பிரகாஷ் வாங்கி பரிசோதித்ததில் அவை, தங்க முலாம் பூசிய போலி நகைகள் என தெரிந்தது.இதுகுறித்து, அவர், திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த, போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் இருவரும், வேலூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு மகன் கன்னியப்பன், 36, மற்றும் சேகர் மகன் சதீஷ், 28, எனத் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


