Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/எனது அலுவலகத்தில் உண்ணாவிரதம்: ஹசாரேவுக்கு வருண் எம்.பி. அழைப்பு

எனது அலுவலகத்தில் உண்ணாவிரதம்: ஹசாரேவுக்கு வருண் எம்.பி. அழைப்பு

எனது அலுவலகத்தில் உண்ணாவிரதம்: ஹசாரேவுக்கு வருண் எம்.பி. அழைப்பு

எனது அலுவலகத்தில் உண்ணாவிரதம்: ஹசாரேவுக்கு வருண் எம்.பி. அழைப்பு

ADDED : ஆக 07, 2011 07:15 AM


Google News
Latest Tamil News
லக்னோ: பலவீனமான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட உள்ளதை கண்டித்து டில்லியில் உண்ணாவிரதம் இருக்க‌ப்போவதாக அறிவித்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தால், அதற்கு பதிலாக எனது வீட்டு வளாகத்திலோ, அல்லது அலுவலகத்திலோ ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வருமாறு பா.ஜ.க.

வின் வருண் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து லக்னோவில் பேசியதாவது: ஊழலை ஒழித்துகட்ட வலுவனா ஜான் லோக்பால் சட்டம் தேவை என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு அன்னா ஹசாரே அரும்பாடுபடுகிறார். ஊழல் தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ.யினை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. தற்போது மத்திய அரசு வடிவமைத்துள்ள லோக்பால் ம‌சோதா பலவீனமானதாக உள்ளது. இதனை கண்டித்து டில்லி ஜந்தர்மந்தரில் அன்னா ஹசாரே 16-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி தர மறுத்துள்ளது சரியல்ல, ஒரு பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க யாரையும் தடுக்க முடியாது. ஒரு வேளை மத்திய அரசு அனுமதி தர மறுத்தால். எனது வீட்டு வளாகத்திலோ, எனது அலுவலகத்திலோ ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வருமாறு ஒரு லோக்சபா எம்.பி. என்றமுறையில் நான் அவரை அழைக்கிறேன்.இதை அவர் ஏற்றுக்கொண்டால் அதை பெருமையாக கருதுகிறேன்.இவ்வாறு வருண் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us