Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/காட்சி பொருளாக உள்ள விவசாய கருவிகள்

காட்சி பொருளாக உள்ள விவசாய கருவிகள்

காட்சி பொருளாக உள்ள விவசாய கருவிகள்

காட்சி பொருளாக உள்ள விவசாய கருவிகள்

ADDED : ஆக 08, 2011 03:04 AM


Google News
பனமரத்துப்பட்டி: 'கூலி ஆட்கள் தட்டுப்பாட்டை சமாளிக்க தயாரிக்கப்பட்ட விவசாய கருவிகள், பயன்பாடின்றி வெறும் காட்சி பொருளாக மட்டும் உள்ளது.

கிராமங்களில், கருவிகளை வைத்து செயல் விளக்க பயிற்சி அளிப்பதோடு, வாடகைக்கு விட வேண்டும்' என, பனமரத்துப்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தவர்கள், நகரங்களில் ஏற்பட்ட தொழில் அபிவிருத்தி காரணமாக, விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். விவசாய கூலி வேலை பார்த்து வந்தவர்களும், கட்டுமான பணி, நூற்பாலை, சிறு தொழிற்சாலை உள்ளிட்ட பணிக்கு மாறி வருகின்றனர். அதனால், கிராமங்களில் விவசாய கூலி ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, நடவு, களை பறித்தல், அறுவடை உள்ளிட்ட பணி பாதிப்படைந்துள்ளது. கூலி ஆட்கள் தட்டுப்பாட்டை சமாளிக்க, வேளாண் துறை சார்பில் பல்வேறு கருவிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. விவசாய கருவிகளை விலை கொடுத்து வாங்க முடியாத நிலை, இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் வழி முறைகள் குறித்து, சிறு விவசாயிகளுக்கு தெரியவில்லை. அதனால், விவசாய கருவிகள் இருந்தும், அதை பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாமல் பல விவசாயிகள் உள்ளனர். விவசாய கருவிகளை, கிராமங்களுக்கு கொண்டு வந்து, அதை பயன்படுத்தும் முறை பற்றி செயல் விளக்கம் செய்து காட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் சண்முகம் கூறியதாவது: விவசாயிகளுக்கு, தண்ணீருக்கு அடுத்தபடியாக கூலி ஆட்கள் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது. கூலியாட்கள் பற்றாக்குறையால், விவசாயம் செய்ய முடியாமல், உற்பத்தி கடுமையாக பாதிக்கிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், பல அற்புதமான விவசாய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உழவு கருவிகள், குழி அமைத்தல், பார் ஒதுக்குதல், விதை, பயிர் நடவு செய்தல், களை பறித்தல், பல்வேறு உற்பத்தி பொருட்களை எளிமையாக அறுவடை செய்தல் ஆகியவைக்கு, பல்வேறு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திக்கு பயன்படும் கருவிகள், வேளாண்மை பல்கலைக் கழகத்தில், வெறும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. அதிக விலையுள்ள இயந்திரங்களை, சிறு விவசாயிகள் சொந்தமாக வாங்க முடியாத நிலை உள்ளது. விவசாய கருவிகளை, கிராமங்களுக்கு கொண்டு வந்து, அதை செயல்படுத்தும் முறை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கருவிகளை கிராமத்தில் வைத்து, வாடகைக்கு விட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us