Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 09, 2011 01:40 AM


Google News
கும்பகோணம்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் யூனியன் அலுவலகங்கள் முன்பு வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.கும்பகோணம் யூனியன் அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, சி.பி.எம்.ஒன்றிய செயலாளர் நாகராஜன், துணைத்தலைவர் நாகமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்கக்கோரியும், 100 நாள் வேலை கேட்டும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மேலும் ஊதியத்தை வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் வழங்க கோரியும், தொழிலாளர்கள் முன்னிலையில் செய்த வேலையை அளக்கவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திருவிடைமருதூர் யூனியன் அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணிக்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ராமையன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் சின்னைபாண்டியன், பகுதிக்குழு செயலாளர் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாதர்சங்க ஒன்றிய தலைவர் மாலதி, ஒன்றிய தலைவர் மணிமாறன் உள்ளிட்ட 40 பெண்கள் உள்பட 75 பேர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us