/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சட்ட பட்டதாரிகள் 44 பேருக்கு தொழில்துவங்க ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கல்சட்ட பட்டதாரிகள் 44 பேருக்கு தொழில்துவங்க ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கல்
சட்ட பட்டதாரிகள் 44 பேருக்கு தொழில்துவங்க ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கல்
சட்ட பட்டதாரிகள் 44 பேருக்கு தொழில்துவங்க ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கல்
சட்ட பட்டதாரிகள் 44 பேருக்கு தொழில்துவங்க ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கல்
ADDED : ஆக 09, 2011 01:41 AM
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள்
கூட்டம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்டத்தின்
கீழ் பேராவூரணி வட்டம், நாட்டாணிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பானுமதி
என்பவர் விபத்தில் இறந்ததை முன்னிட்டு, அவரது கணவர் மகேந்திரனிடம் ஒரு
லட்சத்து இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டது.மாவட்ட வழங்கல்
துறையின் சார்பில் தஞ்சை வட்டத்தை சேர்ந்த பத்து பயனாளிகளுக்கும்,
திருவையாறு வட்டத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கும், ஒரத்தநாடு வட்டத்தை
சேர்ந்த 50 பயனாளிகளுக்கும், பாபநாசம் வட்டத்தை சேர்ந்த 20
பயனாளிகளுக்கும், திருவிடைமருதூர் வட்டத்தை சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கும்
ஆக மொத்தம் 105 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளும், மாவட்ட
பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் பாபநாசம்
வட்டத்தை சேர்ந்த நான்கு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களும்
கலெக்டரால் வழங்கப்பட்டது.
இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த 44 சட்டப் பட்டதாரிகளுக்கு சொந்தமாக
தொழில் துவங்க தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் நான்கு லட்சத்து 40
ஆயிரம் ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி
கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் வளர்மதிக்கு கலெக்டர் தன் விருப்ப
நிதியில் இருந்து பெட்டிக்கடைக்கு தேவையான 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான
பொருட்ககளை கலெக்டர் பாஸ்கரன் வழங்கினார்.குறைதீர் முகாமில், டி.ஆர்.ஓ.,
சுரேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது ஆரிப் சாகிப் பொது,
மாலா (சத்துணவு), மாவட்ட வழங்கல் அலுவரல் சக்திவேல், உதவி ஆணையர் (கலால்)
முத்துகுமாரசாமி, மாவட்ட பிற்பட்டடோர் நல அலுவலர் (பொது) ஜேம்ஸ்செல்லையா,
துணை கலெக்டர் ரவிக்குமார், (முத்திரை தாள்) பாலசுப்பிரமணியன்,
(சமூகபாதுகாப்பு திட்டம்) மாவட்ட தாட்கோ மேலாளர் செண்பகவள்ளி மற்றும்
அனைத்துதுறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


