Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனம் திறப்பு

சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனம் திறப்பு

சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனம் திறப்பு

சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனம் திறப்பு

ADDED : ஆக 09, 2011 02:02 AM


Google News
சேலம்:சேலம், வாசவி சுபிட்ஷா ஹால் வளாகத்தில், வாசவி மகிளா சமாஜம் சார்பில், சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனம் திறப்பு விழா நடந்தது.

சேலம் வைஸ்ய மக்கள் நலம் பெற, நட்சத்திரங்களின் ஆசி பெற, சமாஜத்தின் 30வது ஆண்டு துவக்க நாள் நினைவாக, தருநம் அமைப்பினர் சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனத்தை உருவாக்கியுள்ளனர்.சாரதி முன்னிலை வகித்தார். அகில பாரத ஆர்ய வைஸ்ய மஹிளா மகாசபா தலைவி சுகந்தி சுதர்ஸனம் தலைமை வகித்தார். சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி வேணுகோபால் பிருந்தாவனத்தை திறந்து வைத்தார்.சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனத்தில் நுழையும் இடத்தில், விநாயகரை வணங்கி விட்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 27 நட்சத்திரங்களுக்குரிய விருட்சங்களுடன் அமைந்துள்ளது. நடுவில் பிருந்தாவனம் வைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களுக்குரிய இடத்தை சுற்றிலும் நடைபாதை உள்ளது. எனவே, வைஸ்ய மக்கள் தினமும் இந்த இடத்தில் நடை பயில வரலாம். அவரவர் நட்சத்திர தினத்தன்று விருட்சத்திற்கு பூஜையும் செய்யலாம்.

ஒன்றாக நடை பயிலுவதால், நமக்குள் ஒற்றுமை உணர்வும், பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.அஸ்வினி நட்சத்திரத்துக்கு எட்டி மரம், பரணி நட்சத்திரத்துக்கு நெல்லி, கார்த்திகைக்கு அத்தி, ரோகினிக்கு நாவல், மிருகஷீரிடம் கருங்காலி, திருவாதிரைக்கு செங்கா, புனர்பூசத்துக்கு மூங்கில், பூசத்துக்கு அரசு, ஆயில்யத்துக்கு புன்னை, மகத்துக்கு ஆலமரம், பூரத்துக்கு பலாசு, உத்திரத்துக்கு அரளி, அஸ்தமுக்கு வேலம், சித்திரைக்கு வில்வம், சுவாதிக்கு மருதம், விசாகத்துக்கு விளா, அனுஷத்துக்கு மகிழம், கோட்டைக்கு பிராய், மூலத்துக்கு மா, பூராடத்துக்கு வஞ்சி, உத்திராடத்துக்கு சக்கைப்பலா, திருவோணத்துக்கு எருக்கு, அவிட்டத்துக்கு வன்னி, சதயத்துக்கு கடம்பு, பூரட்டாதிக்கு தேமாகருமருது, உத்திரட்டாதிக்கு வேம்பு, ரேவதிக்கு இலுப்பை என மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us