ADDED : ஆக 09, 2011 02:03 AM
சேலம்:சேலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தின் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம், அம்மாபேட்டையில் 'அன்புக்கு நான்அடிமை'
பெயரில் ரஜினி ரசிகர் மன்றம் இயங்கி வருகிறது.
தற்போது, அம்மாபேட்டை
மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை நடந்து வருவதால், பக்தர்களை வரவேற்று,
ரசிகர்மன்றம் சார்பில், பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள
திருமண மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை, மர்ம ஆசாமிகள் கிழித்து
சேதப்படுத்தி உள்ளனர். தகவல் அறிந்து, நேற்று காலை 9 மணியளவில் மாவட்ட
ரஜினி மன்ற தலைவர் பழனிவேலு தலைமையில், அம்மாபேட்டை மண்டல பொறுப்பாளர்
துளசிராமன், கோபி, செந்தில், அங்கப்பன், ராஜா உள்பட ஏராளமான ரசிகர்கள்
அப்பகுதிக்கு திரண்டு வந்தனர். பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்
மீது நடவடிக்கை கோரி கோஷமிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது
தொடர்பாக, அம்மாபேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.


