வீரபாண்டி ஆதரவாளர்கள் கோவையில் கைது
வீரபாண்டி ஆதரவாளர்கள் கோவையில் கைது
வீரபாண்டி ஆதரவாளர்கள் கோவையில் கைது
ADDED : ஆக 11, 2011 12:13 AM

கோவை : வீரபாண்டி ஆதரவாளர்கள், கோவையில் கைது செய்யப்பட்டனர்.
நில அபகரிப்பு புகாரில் சிக்கி தி.மு.க. முனன்õள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட போது, சேலத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு, பஸ்கள் உடைப்பு <உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அதில் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வருபவர் சேலம் தம்மம்பட்டி தி.மு.க.நகர செயலாளர் வி.பி.ஆர். ராஜன். இவர், கோவை சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திக்க வருவதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதேபோல், வீரபாண்டியாரை சந்திக்க வந்த ராஜன் உள்ளிட்ட 4 பேரை கோவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல், சேலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சேலம் போலீசார் கோவை விரைந்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 4 பேரும், சேலம் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.


