இலங்கைக்கு மின் சப்ளை: ஆந்திராவுக்கு மாற்றம்
இலங்கைக்கு மின் சப்ளை: ஆந்திராவுக்கு மாற்றம்
இலங்கைக்கு மின் சப்ளை: ஆந்திராவுக்கு மாற்றம்
ADDED : ஆக 11, 2011 04:47 PM
மண்டபம்: தமிழகம் வழியாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக மின் வினியோகப்பணி ஆட்சி மாறியவுடன் ரத்து செய்யப்பட்டு,ஆந்திரா வழியாக பணி துவங்க உள்ளது.
மத்திய அரசின் 'பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம்,பாக் ஜலசந்தி கடல்பகுதியில் மின் வினியோகத்திற்காக மண் ஆய்வுப்பணியை 16.12.2010ல் மண்டபம் பகுதியில் துவங்கியது. ஆய்வு முடிந்த பின்னர், திட்ட மதிப்பீடு ஒதுக்கப்பட்ட உடன் இந்தியாவிலிருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சார வினியோகம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்குப்பின் ஆட்சி மாறிய பின் தற்போது இலங்கைக்கு மின் வினியோக திட்டம் நிறுத்தப்பட்டு, தற்போது, ஆந்திரா மாநிலம் கடல் வழியாக இலங்கைக்கு மின்வினியோகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


