/உள்ளூர் செய்திகள்/தேனி/திண்டுக்கல்-சபரிமலை ரயில்பாதை: கம்யூ.,தீர்மானம்திண்டுக்கல்-சபரிமலை ரயில்பாதை: கம்யூ.,தீர்மானம்
திண்டுக்கல்-சபரிமலை ரயில்பாதை: கம்யூ.,தீர்மானம்
திண்டுக்கல்-சபரிமலை ரயில்பாதை: கம்யூ.,தீர்மானம்
திண்டுக்கல்-சபரிமலை ரயில்பாதை: கம்யூ.,தீர்மானம்
ADDED : ஆக 11, 2011 11:18 PM
கம்பம் : கம்பத்தில் இந்திய கம்யூ., கட்சியின் மாவட்ட குழு கூட்டம் வக்கீல் பாண்டியன் தலைமையில் நடந்தது..
மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் தங்கம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜீவா அறிக்கை சமர்ப்பித்தார். திண்டுக்கல்-சபரிமலை ரயில்பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். தேனியின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வைகையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் நகர தலைவர் ராஜன், மாவட்ட துணை செயலாளர் பெத்தாட்சி ஆசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.


