திருமலை நாயக்கர் மகாலில் சினிமா படப்பிடிப்பு நடத்த ஐகோர்ட் கிளை தடை
திருமலை நாயக்கர் மகாலில் சினிமா படப்பிடிப்பு நடத்த ஐகோர்ட் கிளை தடை
திருமலை நாயக்கர் மகாலில் சினிமா படப்பிடிப்பு நடத்த ஐகோர்ட் கிளை தடை
ADDED : ஆக 12, 2011 03:11 AM

மதுரை:மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சினிமா படப்பிடிப்பு நடத்த, ஐகோர்ட்
கிளை இடைக்கால தடை விதித்தது.
தினமலர் இதழ் செய்தி எதிரொலியாக தொடரப்பட்ட
வழக்கில் இந்த உத்தரவிடப்பட்டது.மதுரையின் சுற்றுலா தலங்களில் ஒன்றான
திருமலைநாயக்கர் மகாலில், படப்பிடிப்பு நடத்த அனுமதியளிப்பதால், ஏற்படும்
பாதிப்பு குறித்து தினமலர் அடிக்கடி சுட்டி காட்டி வந்தது. இந்நிலையில்
வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கு:திருமலைநாயக்கர்
மகால், கி.மு.1636ல் கட்டப்பட்டது. அக்காலத்தில் இத்தாலிய கட்டட கலைஞர்
உதவியுடன் மன்னர் திருமலைநாயக்கர் கட்டினார். ஒரு நுழைவு வாயில், தற்போதைய
விளக்குத்தூண் வரை இருந்துள்ளது. தூண்கள், கிரானைட் மற்றும் சுடாத
செங்கற்களால் கட்டப்பட்டது. கருப்பட்டி, கடுக்காய், வெள்ளைக்கருவை
பயன்படுத்தி, கலவை செய்து பயன்படுத்தினர். தொல்லியல் துறை
கட்டுப்பாட்டிலுள்ள இங்கு, படப்பிடிப்பு நடப்பதால் சுவர்கள், சிற்பங்களும்,
தொன்மையான பொருட்களும் சேதமுறுகின்றன. சமீபத்தில் அரசு, ரூ.3 கோடியில்
மகாலை சீரமைத்தது. ரூ.5000 வாடகைக்காக அரசுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது.
எனவே படப்பிடிப்பு நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். நான் அளித்த
மனுவின்படி மகாலை பாதுகாக்க உத்தரவிட வேண்டும், என
தெரிவிக்கப்பட்டது.வழக்கு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச்
முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்
ஆர்.செந்தில்குமார் ஆஜரானார். வழக்கின் கூடுதல் ஆவணங்களாக தினமலர் இதழில்,
ஜூலை 5ல் வெளியான படத்துடன் கூடிய செய்தி நகலை இணைத்திருந்தனர்.
இதுகுறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்க கலெக்டர் மற்றும் தொல்லியல் துறை
துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். படப்பிடிப்பு
நடத்தவும் இடைக்கால தடை விதித்தனர்.


