ADDED : ஆக 12, 2011 10:43 PM
பெரம்பலூர்: 'பெரம்பலூர் கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் வரும்
17ம் தேதி நடக்கிறது' என கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் ராமமூர்த்தி
தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:கூட்டுறவுத்துறை சார்பாக
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வரும் 17ம்
தேதி காலை 11 மணிக்கு இணைப்பதிவாளர் ராமமூர்த்தி தலைமையில்
நடக்கிறது.கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள்,
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயிர் கடன் பெறுதல், உர விநியோகம் ,
இதர கடன்கள் குறித்த பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்.


