ADDED : ஆக 12, 2011 10:43 PM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தரகமருதூரை சேர்ந்தவர் ரமேஷ் (28).
இவருக்கும் நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்த உமா (22)க்கும் கடந்த மூன்றரை
ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு எட்டு மாத பெண் குழந்தை
உள்ளது. கணவன் மனைவி இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில்
ஆத்திரமடைந்த உமா, குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ரமேஷ்
மாமனார் வீட்டுக்கு வந்து உமாவை தனது வீட்டுக்கு அழைத்தார். உமா
மறுக்கவே, குழந்தையை ரமேஷ் தூக்கி சென்றார்.இதனால் மனமுடைந்த உமா விஷம்
குடித்து விட்டு தனது கணவர் வீட்டுக்கு சென்றார். அங்கு மயங்கிய அவரை
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
வாய்மேடு போலீஸார் விசாரிக்கின்றார். நாகை ஆர்.டி.ஓ., மணிகண்டன் விசாரணை
மேற்கொண்டுள்ளார்.


