ADDED : ஆக 12, 2011 10:47 PM
ஓசூர்: அகில இந்திய கால்பந்து கழகம் சார்பில் கால்பந்து பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு முகாம் ஓசூர் அதியமான் இன்ஜினிரிங் கல்லூரியில் நேற்று துவங்கியது.முகாமை கல்லூரி முதல்வர் ரங்கநாத் துவக்கி வைத்து பேசினார். முகாமில், இந்திய கால்பந்து அணியில் விளையாடிய 15 வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியாளருக்கான பயிற்சி பெறுகின்றனர்.இந்தியா முழுவதும் இருந்து 26 வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அகில இந்திய கால்பந்து கழக பயிற்சியாளர்கள் வின்சன் சுப்பிரமணியம், கேப்ரியல் ஜோசப் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
முகாம் செப்டம்பர் 7ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் அதன் பின் பல்வேறு மாநில பயிற்சியாளர்களாகவும், இந்திய அணி பயிற்சியாளராகவும் பணிபுரிய தேர்வு செய்யப்படுவார்கள்.ஜீ ஸ்கூல் சேர்மன் சந்திரசேகர், விஜய் மருத்துவமனை டாக்டர் ராஜேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரிதோஸ்பாபு, கிருஷ்ணகிரி மாவட்ட கால்பந்து கழக தலைவர் சையத் அமீன், செயலாளர் ஸ்டாலின் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


