காலையில் டிராபிக்கில் சிக்காமல் போக வேண்டுமா? :வந்துவிட்டது "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,'
காலையில் டிராபிக்கில் சிக்காமல் போக வேண்டுமா? :வந்துவிட்டது "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,'
காலையில் டிராபிக்கில் சிக்காமல் போக வேண்டுமா? :வந்துவிட்டது "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,'

சென்னை : பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, 'டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்தில் இருந்து விலக வேண்டும் என நினைத்தால்,' LEAVE CTP' என அதே எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். இந்த சேவை,'ஈNஈ' சேவையுடன் கூடிய மொபைல் எண்ணிற்கு கிடைக்காது. இந்த சேவையை 'www.smsgupshub.com/groups/ctp'' என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சேவை குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது: இந்த சேவை இன்று (நேற்று) முதல் அறிமுகமாகிறது. இதில், முதல் தடவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம், மொபைல் பிளானில் உள்ளபடி செலுத்த வேண்டும். தொடர்ந்து பெறப்படும் தகவல்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இதில், போக்குவரத்து நெரிசல், விபத்து, ஆர்ப்பாட்டம், மறியல் நடக்கும் இடங்கள், வாகன போக்குவரத்து மெதுவாக செல்லும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.
தினசரி காலை, மாலை வேளைகள் தவிர, சென்னையில் போக்குவரத்து பிரச்னை தொடர்பான எட்டு முதல் 20 எஸ்.எம்.எஸ்., வரை அனுப்பப்படும். பொதுமக்கள் வழக்கம் போல், தங்களுக்கு ஏற்படும் போக்குவரத்து தொடர்பான விஷயங்களை போக்குவரத்து கட்டுப்பாட்டறைக்கு தகவலாக அனுப்பலாம். இ- சலான் திட்டத்தில் ஏற்கனவே, தினசரி 3,500 வழக்குகள் சராசரியாக பதியப்படுவதாக கூறியிருந்தேன். தற்போது அது 3,800 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 4,200 வழக்குகள் பதியப்பட்டு, 3 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
வாகன நம்பர் பிளேட் விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 45 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஜூலை மாதத்தில் மட்டும் 16 ஆயிரம் வழக்குகள். மோட்டார் வாகன சட்டத்தில், இதற்கு தனியாக அபராத கட்டணம் தெரிவிக்கப்படவில்லை. சட்டப்பிரிவு 177ன் படி 50 ரூபாய் அபராதமாக விதிக்கிறோம்.
சென்னையில் ஏற்கனவே 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய விஷயம். மேலும், 37 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பைக் ரேஸ் நடத்திய இரண்டு குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளன. பைக் ரேஸ் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சஞ்சய் அரோரா கூறினார். உடன், தென்சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் சுதாகர், போக்குவரத்து திட்டமிடல் கூடுதல் துணை கமிஷனர் சிவானந்தம் ஆகியோர் இருந்தனர்.


