Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தோழனுக்கு தோள் கொடுங்கள்

தோழனுக்கு தோள் கொடுங்கள்

தோழனுக்கு தோள் கொடுங்கள்

தோழனுக்கு தோள் கொடுங்கள்

ADDED : ஆக 15, 2011 10:32 AM


Google News

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் போல தோழர்களுடன் நெருங்கிப் பழகுபவர், அவர்களோடு ஒன்றிப்போகும் ஒருவரைக் காண்பது அரிது.

இறைத்தூதராக இருந்தும், தனது தோழர்களுடன் அவர்கள் சகஜமாகவே இருப்பார்கள். தனது வேலைகளைத் தானே செய்வது அவர்களது வழக்கம். உடையைத் தைப்பார்கள், செருப்பை செப்பனிடுவார்கள், மனைவிமார்களுக்கு வீட்டுப்பணியில் உதவி செய்வார்கள்,

ஆடுகளிடம் பால் கறக்கவும் செய்வார்கள். மஸ்ஜித் ஒன்றைக் கட்டும்போது, தோழர்களுடன் சேர்ந்து கல் சுமந்தார்கள். ஒருமுறை நண்பர்களுடன் பயணம் செய்தபோது, வழியில் சமைக்க ஏற்பாடு செய்தனர். நாயகம்(ஸல்) அவர்கள் விறகு வெட்டி வரும் பணியை ஏற்றுக் கொண்டார்கள்.

'இதை நாங்களே செய்கிறோம்'' என தோழர்கள் சொன்னபோது, நான் என்னை உங்களை விட உயர்வான ஸ்தானத்தில் விரும்பவில்லை. தன் தோழர்களை விட தன்னை உயரிய நிலையில் வைத்துக் கொள்பவனை அல்லாஹுத்தஆலா(இறைவன்) நேசிக்க மாட்டான்,'' என்றார்கள்.

நண்பர்களை நாம் எந்தளவுக்கு நேசிக்க வேண்டும் என்பதற்கு நாயகம் அவர்களின் வாழ்க்கை சரித்திரம் ஒரு வழிகாட்டி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us