மதராஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிரெஞ்சுக்காரர்கள்
மதராஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிரெஞ்சுக்காரர்கள்
மதராஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிரெஞ்சுக்காரர்கள்
ADDED : ஆக 17, 2011 06:50 PM
பிரெஞ்சுப் படைத் தளபதியான டி லா போர்ட்னாயிஸ், 1746 -ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, ஆங்கிலக் கப்பற்படை வடக்கு நோக்கிச் சென்றிருப்பதைத் தெரிந்து கொண்டு தனது வீரர்களுடன் ஒன்பது கப்பல்களிலும் இரண்டு பீரங்கி வீசும் கப்பல்களுடனும் மதராசின் ஒரு திடீர் தாக்குதல் நிகழ்த்தினார்.
எதிர்ப்பு ஒன்றும் இல்லாத நிலையில் காலையில் அவர் சாந்தோமுக்குத் தெற்கில் 600 காலாட்படையினருடன் தரை வழித் தாக்குதல் நடத்தி வடக்கு நோக்கி நகர்ந்தார். மற்ற வீரர்கள் திருவல்லிக்கேணி கோயிலருகில் இறங்கினர். தெற்கிலிருந்து முன்னேறி கோட்டையைத் தாக்க ஆரம்பித்தபோது கோட்டையின் பீரங்கிகளால் இவர்களை நிறுத்த முடியவில்லை. பெண்களை மட்டுமாவது வெளியேற்ற அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போது மெட்ராஸ் கம்பெனித் தலைவராக இருந்தவரும் மற்ற மூத்த அதிகாரிகளும் கலந்தாலோசித்தனர். கேப்டன் எக்மன் என்பவரைத் தவிர மற்றெல்லோரும் கோட்øடால் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியததெனக் கூறிவிட்டனர். (திடீர் தாக்குதலின் போது நிலைமையைச் சமாளிக்கும் வகையில் பீரங்கிகளையும் வீரர்களையும் இவர் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது; பின்னர் பதவி நீக்கமும் செய்யப்பட்டார்)
டி லா போர்ட்னாயிஸ் செப்.4 -ம் தேதியன்று, 1800 படை வீரர்களுடன் முன்னேறி 5 -ம் தேதியன்று சிந்தாதறிப்பேட்டையை அடைந்தனர். 7 -ம் தேதியன்று கோட்டையின் மீது தாக்குதல் நடந்தது. அதே நேரத்தில் கடலிலிருந்தும் பீரங்கிகள் கோட்டையை நோக்கிச் சுட்டன. 8 -ம் தேதி வரை குண்டு வீச்சு நடந்தது. 8 -ம் தேதி மாலை அப்போதைய கவர்னர் செயலிழந்து இருந்ததால், அவரது தூதுவரால் பிரெஞ்சுத் தளபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது.
அதன்பஐ சரணாகதி உடன்படிக்கை ஏற்பட வேண்டி தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் எதிரிகளுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஆனால், டி லா போர்ட்னாயிஸ் கோட்டையை ஆக்கிமிப்பதில்தான் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
அதன்படி, “இந்த நகரமும் அதிலுள்ள கோட்டையும், அதனைச் சார்ந்துள்ள எல்லா இடங்களும் பொருளும், இன்று அதாவது10 செப்டம்பர், மதியம் 2 மணியிலிருந்து , டி லா போர்ட்னாயிஸ் கையில் தரப்படுகிறது. கோட்டைக்குள் இருக்கும் அனைத்து ஆங்கிலேய அதிகாரிகளும் , படைகளும் போர் கைதிகளாவர்...’ என பட்டியல் தயாரிக்கப்பட்டது.
டி லா போர்ட்னாயிஸ் கோட்டையின் மேற்கு வாயில் வந்ததும், கவர்னர் மோர்ஸ் சரணாகதிக்கு அடையாளமாகத் தனது உடைவாளை அவரிடம் தந்தார். போர் வீரர்கள் முறைப்படி உடைவாள் அவரிடமே திருப்பித் தரப்பட்டது.
இப்படி ஆங்கிலேயர்களால் தாரை வார்க்கப்பட்ட மதராசப்பட்டினம் பிரெஞ்சுக்காரர்கள் கையில் 1749 வரை இருந்தது.


