ADDED : ஆக 17, 2011 06:59 PM
பீஜிங்: பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள, ஒசாமா பின்லாடன் வீட்டில் விழுந்த அமெரிக்க உளவு விமானத்தை ஆராய்வதற்கு, சீன அதிகாரிகளுக்கு பாக்., அனுமதி அளித்ததாக வெளியான செய்தியை சீனா மறுத்துள்ளது.
கடந்த 14ம் தேதி, சர்வதேச பொருளாதாரப் பத்திரிகையான 'பினான்சியல் டைம்ஸ்', உ<ளவு விமானத்தை ஆராய சீன அதிகாரிகளுக்கு, பாகிஸ்தான் அனுமதி அளித்ததாக செய்தி வெளியானது. நேற்று பாகிஸ்தான் இச்செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்ட ஒற்றை வரி அறிக்கையில்,' அச்செய்தி ஆதாரமில்லாதது; முட்டாள் தனமானது' என குறிப்பிடப்பட்டுள்ளது.


