நிலக்கடலை விலை சரிவு விவசாயிகள் கவலை
நிலக்கடலை விலை சரிவு விவசாயிகள் கவலை
நிலக்கடலை விலை சரிவு விவசாயிகள் கவலை
ADDED : ஆக 18, 2011 09:28 PM
கூடலூர்:நிலக்கடலை விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள்
கவலையடைந்துள்ளனர்.கூடலூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை
விவசாயம் நடந்து வருகிறது.
தற்போது கடலை அறுவடை நடந்து வருகிறது. ஒரு மூடை
600 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கூடலூர்
மார்கெட்டில் வியாபாரிகள் வாங்குகின்றனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் 1000
ரூபாயில் இருந்து 1200 வரை விலை இருந்தது. தற்போது விலை மிகக் குறைவாக
உள்ளதால் நிலக்கடலை பயிரிட ஆகும் செலவுத்தொகை கூட கிடைக்கவில்லை என
விவசாயிகள் புலம்பியுள்ளனர்.


