சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடா? : வணிகர் சங்க பேரமைப்பு போராட முடிவு
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடா? : வணிகர் சங்க பேரமைப்பு போராட முடிவு
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடா? : வணிகர் சங்க பேரமைப்பு போராட முடிவு
சென்னை : ''சில்லறை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, சில்லறை வியாபாரிகளை பெரிதும் பாதிக்கும்.
சில்லறை வணிகத்தில், 51 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து, பகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், வண்ணாரப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலர் மோகன், நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப்பின், மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, நிருபர்களிடம் கூறியதாவது: சில்லறை வணிகத்தில், 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசுக்கு, அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். நடப்பு கூட்டத்தொடரில், இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க முயற்சித்து வருகிறது. இவ்வாறு செய்வது, சில்லறை வியாபாரிகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கும். பெரிய வியாபாரிகள் கூட, அன்னிய நிறுவன வரவால், சில்லறை வியாபாரிகளாகிவிடுவர். மத்திய அரசின் செயலால்,. வியாபாரிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். மத்திய அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து, வரும் 3ம் தேதி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது. எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என்பது குறித்து, அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். வியாபாரிகள் மீது அக்கறை காட்டும் தமிழக முதல்வர், சில்லறை வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.


